Sunday 25 October 2009

இலையுதிர் ...




வசந்தத்திற்கு சவால் விடும் வர்ண ஜாலம்,
வனங்களின் இந்த வானப்ரஸ்தம் ...
மரங்களின் இந்த மாலைப்பொழுது...
கடந்து போன வசந்தங்களைப் பற்றி கவலைகள் ஏதுமின்றி
எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான் ...

5 comments:

Anonymous said...

எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான்...

தங்கள் வயது சுமார் எழுபது இருக்குமோ?

வானப்ரஸ்தத்திற்கு வரையறுக்கப்பட்ட விண்ணப்ப விதிகளின் படி சுமார் எழுபது எண்பது ஆண்டாவது கடந்திருக்கவேண்டும்...

அது வரை பொறுமை பொறுமை....

Anonymous said...

மரங்களுக்கு இலையுதிர் காலம் வருடத்திற்கு ஒரு முறை...
ஆனால் மனிதர்களுக்கோ வாழ்க்கைக்கே ஒரு முறை...

வசந்தங்களை இழந்த சில மனிதர்கள் வாழத்தான் என்ன நிர்பந்தனை?

sowpar said...

@ anon 1 - அறிவின் முதிர்ச்சிக்கும் அகவையின் முதிர்ச்சிக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்பதில்லையே... பெரும்பாலும் இருப்பதும் இல்லை...

வானப்ரஸ்தம் என்பது ஒரு மனநிலை - mindset ... அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.... but for the record, எனக்கு இன்னும் எழுபது ஆகவில்லை :)

sowpar said...

@anon 2 - வசந்தங்கள் எல்லாருக்கும் வண்ணமயமாக அமைவதில்லை தான்... அதற்காக கடந்தவற்றைப் பற்றி கவலைப் படுவதிலேயே நிகழ்காலத்தைக் கழிப்பதில் என்ன பயன் ?

நிர்ப்பந்தம் என்று நினைத்தால் வாழ்கை சுமைதான்... சவால் என்று நினைத்தால் எதையும் எதிர்கொள்ளத் தோன்றும் ...

Anonymous said...

மொட்டை மரங்கள் இலையின்றி வாழ்வதில் தான் எத்தனை இதயங்கள் நிறைவடையும் என்றால்... மரங்களும்..